நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது குறித்து எதிர்வரும் 6 ம் திகதி தீர்மானிக்கப்படும் என அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை குறித்து, தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடு காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடு தொடரும் பட்சத்தில், தற்போது கொவிட் தொற்றில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை மேலும் குறைக்க முடியும் என அதிகாரிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் 7ம் திகதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை, எதிர்வரும் 14 அல்லது 15ம் திகதி வரை நீடிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் 6 ம் திகதி ஜனாதிபதி தலைமையில் கூடும் கொவிட் செயலணியின் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post