போலி இலக்கத் தகடை கொண்ட, பல்வேறு வாகனங்களின் பாகங்களின் ஊடாக தயாரிக்கப்பட்ட ப்ராடோ வாகனமொன்றை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், கடுவளை நகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 46 வயதான உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் சுமார் 5 வருடங்கள் இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளமை, விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்படுள்ளதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை கடுவளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
Discussion about this post