ஜா−எல − பமுணுகம கடல் பகுதியில் பாரிய எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீபற்றிய எக்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியேறிய எண்ணெய் படலமா இது என்பது குறித்து தற்போது ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் இலங்கையின் மேற்கு கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கியுள்ளதை அவதானிக்க முடிவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post