பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறை எதிர்வரும் 15ம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நாட்டில் பரவிவரும் கொவிட் தொற்றுக்கு மத்தியில் மே மாதம் 11ம் திகதி முதல் இன்று (31) வரை அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறை ரத்து செய்யப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் தொடந்தும் காணப்படுகின்றமையினால், எதிர்வரும் 15ம் திகதி வரை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
Discussion about this post