கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கண்டி, வத்தேகம, கென்கல்ல மஹா வித்தியாலயத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்போது, தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு, நபரொருவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதமொன்றை அதிகாரிகளுக்கு கையளித்துள்ளார்.
இதில் “ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது சொட்டு மருந்தை மாத்திரம் செலுத்திக்கொள்ள நான் விருப்பம்” என அந்த கடிதத்தில் எழுதியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், கொவிட் தடுப்பூசியின் உயரீய பாதுகாப்பை பெற்றுக்கொள்ள இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது அவசியம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். (ADA DERANA)
Discussion about this post