நாடு முழுவதும் அமலாக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்படாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று மற்றும் எதிர்வரும் 4ம் திகதிகளில் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், கடந்த 25ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் மக்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்ந்து, பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 7ம் திகதி வரை தளர்த்தாதிருப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.
இந்த நிலையில், 7ம் திகதி வரை தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு தேவையான பொருட்களை வீடுகளுக்கே கொண்டு வந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பயணக் கட்டுப்பாட்டை மீறிய 755 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
Discussion about this post