இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இறுதியாக 32 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1210ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 18 பேர் பெண்கள் என்பதுடன், எஞ்சிய 14 பேரும் ஆண்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
29 முதல் 92 வயதுக்கு இடைப்பட்ட 32 பேரே இவ்வாறு கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 23ம் திகதி முதல் இந்த மாதம் 22ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் உயிரிழந்த 27 கொவிட் தொற்றாளர்களின் விபரங்களும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் நேற்றைய தினம் (23) கொவிட் தொற்றினால் உயிரிழந்த 5 பேரின் தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 28 முதல் 91 வயதுக்கு இடைப்பட்ட 32 பேரே அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்ககளம் குறிப்பிடுகின்றது.
Discussion about this post