இரண்டாம் இணைப்பு
பங்களதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மூவருக்கும், மீண்டும் PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.
இவ்வாறு மீண்டும் நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளில் சிரான் பெர்ணான்டோவிற்கு மாத்திரம் கொவிட் தொற்று உள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிடுகின்றது.
இசுறு உதான மற்றும் சமிந்த வாஸ் ஆகியோருக்கு இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தெரியவருகின்றது.
முதலாம் இணைப்பு
பங்களதேஷிற்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அணி வீரர்களான இசுறு உதான, சிரான் பெர்ணான்டோ மற்றும் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் ஆகியோருக்கே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை. இலங்கை கிரிக்கெட் அணியின் ஏனைய வீரர்களுக்கு இன்று PCR பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post