கொழும்பு நகரம், சன நெரிசல் மிக்க பகுதிகள், தொடர்மாடி குடியிருப்புக்கள் மற்றும் பெருந்தோட்ட பகுதிகளை அண்மித்த இடங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரை அடையாளம் காணும் வகையில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி தேடுதல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
விசேட அதிரடி படை மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சோதனைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குழுக்களாக இணைந்து வெளியில் நடமாடுவதை விடுத்து, வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கவை என்பதனால், அனைவரது ஒத்துழைப்புக்களும் அவசியம் என அவர் கூறுகின்றார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
Discussion about this post