கொரோனா தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
நேற்றைய தினம் கூடிய விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுதாபனம், சினோவெக் பயோடெக் மற்றும் கெலுன் லயிஃப்சயன்ஸஸ் தனியார் நிறுவனம் ஆகிய இணைந்து, கொவிட் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
Discussion about this post