நாட்டில் நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானோர் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
கண்டி மாவட்டத்தில் நேற்றைய தினம் 338 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 288 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாரளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தில் 321 தொற்றாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 277 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 184 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
ஏனைய சில மாவட்டங்களின் விபரங்கள்
- குருநாகல் மாவட்டம் : 181
- மாத்தறை : 104
- அநுராதபுரம் : 98
- இரத்தினபுரி : 94
- காலி : 82
- புத்தளம் : 81
- ஹம்பாந்தோட்டை : 72
Discussion about this post