மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க தற்போது எவருக்கும் அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, சோதனைகள் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், வேறு மாகாணங்களிலிருந்து வருகைத் தருவோரை, தங்குமிடங்களில் தங்க வைக்கும் பட்சத்தில், தங்குமிட வசதிகளை வழங்கும் இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவிக்கின்றார்.
மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கு வெளி மாகாணங்களிலிருந்து வருகைத் தருவோரை தங்க வைக்க அனுமதிக்க முடியும் என கூறிய அவர், அது குறித்து பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாண எல்லையை கடப்போர், தமது நிறுவனத்தின் அடையாளஅட்டையை அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
Discussion about this post