நாட்டின் 8 மாவட்டங்களில் நேற்றைய தினம் தலா 100 கொவிட் தொற்றாளர்களுக்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் நேற்று பதிவாகியிருந்தனர்.
கம்பஹா மாவட்டத்தில் 551 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 362 தொற்றாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 321 தொற்றாளர்களும் பதிவாகியிருந்தனர்.
இதன்படி, மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 1234 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், மேல் மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்றைய தினம் 184 தொற்றாளர்களும், குருநாகல் மாவட்டத்தில் 177 தொற்றாளர்களும், காலி மாவட்டத்தில் 170 தொற்றாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 128 தொற்றாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 109 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஒரு தொற்றாளர் கூட அடையாளம் காணப்படாத நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு தொற்றாளர் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளார். (TrueCeylon)
Discussion about this post