வெளிநாட்டிலிருந்து வருகைத் தந்த நிலையில், கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய ஒருவரின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், இந்தியாவில் பரவிவரும் வைரஸ் இனத்துடன் ஒத்து போவதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
B.1.617 என்ற வைரஸ் இனம் கண்டறியப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.
இந்த வைரஸ் இனம் இலங்கையில் முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post