இலங்கையில் நேற்றைய தினம் (07) அடையாளம் காணப்பட்ட 1914 கொவிட் தொற்றாளர்களில் 1393 தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 434 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 591 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 368 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
கம்பஹா மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை மேலும் அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
மேல் மாகாணத்திற்கு அடுத்தப்படியா குருநாகல் மாவட்டத்திலேயே 127 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கண்டி மாவட்டத்தில் 78 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. (TrueCeylon)


Discussion about this post