மேல் மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களும் கொவிட் அச்சுறுத்தல் மிக்க மாவட்டங்களாவே காணப்படுகின்றன.
நேற்றைய தினத்தில் கொழும்பு மாவட்டத்தில் 326 கொவிட் தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 273 கொவிட் தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 309 கொவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, மேல் மாகாணத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 908 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு அடுத்தப்படியாக நேற்றைய தரவுகளின் பிரகாரம், அபாயகரமான மாவட்டங்கள் தொடர்பிலும் நாம் ஆராய்ந்தோம்.
இதன்படி, நேற்றைய தினம் கண்டி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் கூறுகின்றது.
கண்டி மாவட்டத்தில் நேற்று 153 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், காலி மாவட்டத்தில் 131 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் கூறுகின்றது.
Discussion about this post