மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை ரத்து செய்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி, இன்று நள்ளிரவு (10) முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை ரத்து செய்யப்படும் என போக்குவரத்து சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொவிட் தொற்று அதிகரித்துள்ள பின்னணியில், மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 30ம் திகதி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, இலங்கை போக்குவரத்து சபை இந்த தீர்மானத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post