தென்னிந்தி பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் பாண்டு, தனது 74வது வயதில் காலமானார்.
சென்னை − கிண்டியிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையிலேயே, பாண்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும், கொரோனா தொற்றினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அவரது மனைவி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சின்னத்தம்பி, காதல்கோட்டை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் சிறப்பான நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் நடிகர் பாண்டு.
நடிகர் பாண்டு சிறப்பான ஓவியராகவும் இருந்தவர்.
அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர் இவர்தான்.
திறமைமிக்க ஓவியரான பாண்டு, கேப்பிட்டல் என்ற நிறுவனத்தை நடத்தி, நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்பலகையை அழகுற வடிவமைத்துள்ளார். (Puthiyathalaimurai)
Discussion about this post