நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினத்தில் 14 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.
புதிதாக பதிவான உயிரிழப்புக்களுடன், நாட்டில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்று காரணமாக 51, 35, 66, 70, 82, 75, 42 மற்றும் 70 வயதுடைய 8 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, 76, 70, 55, 66, 67 மற்றும் 87 வயதுடைய 6 ஆண்களும் கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
Discussion about this post