அநுராதபுரம் மாவட்டத்தில் சுமார் 100 கொவிட் தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்காது, தமது வீடுகளுக்குள்ளேயே இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அநுராதபுரம் மாவட்ட இணைப்பாளர் டொக்டர் அஜந்த ராஜகருணா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவித்து, முடியுமான அளவு நோயாளர்களை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
எனினும், இடப்பற்றாக்குறை காரணமாக சுமார் 100 பேர் வரை தமது வீடுகளிலேயே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து தாம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.
Discussion about this post