எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கே உள்ளது என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மீண்டுமொரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என குறிப்பிட்ட அமைச்சர், அதனால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தற்போதைக்கு கதைக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித்; தேர்தலில் யார் போட்டியிட போகின்றார்கள் என்பது குறித்து சரியாக கூற முடியாது என்ற போதிலும், பஷில் ராஜபக்ஸவிற்கு அந்த தகுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ போட்டியிடுவார் எனவும், 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் எனவும் எந்தவொரு நபரும் எதிர்பார்க்கவில்லை என அவர் நினைவூட்டியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post