2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி, பல வருடங்களினாக முன்வைக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கான யோசனையும் வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை உள்ளிட்ட வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய விடயங்கள் கீழே
* 25 பில்லியனிற்கும் அதிகமான மாதாந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு தற்போதைய 8 வீத வட் வரி தொடரும்
* வரிகள் தொடர்பான மக்களின் குறைபாடுகளை விசாரணை செய்வதற்கு புதிய மேல்முறையீட்டு
நீதிமன்றம்
* இலங்கையின் வரிவருமானத்திற்கு 50 வீதத்திற்கும் மேல் பங்களிப்பு செய்யும் சிகரெட்,தொலைத்தொடர்பு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றிற்கு விசேட பொருட்கள் சேவைகள் வரி
* வெளிநாடுகளில் வாழ்பவர்கள் இலங்கையில் ஆடம்பர தொடர்மாடிகளை கொள்வனவு செய்ய அனுமதி
* நாடு முழுவதும் ஐந்து தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவப்பட உள்ளன. ரூ. 3,000 மில்லியன் உதவித்தொகை திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்த திட்டத்தில் பங்கேற்பதன் அடிப்படையில் தொழிற்கல்வி பெறும் மாணவர்களுக்கு ரூ.4,000 மாதாந்திர கொடுப்பனவு
* ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1,400 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன்கள் பெறப்பட உள்ளன.
* கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு 2021 டிசம்பர் 31 வரை 50% வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
* குருகெதர கல்வித் திட்டங்களை மாணவர்கள் பார்க்க கிராமப்புற பாடசாலைளுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட உள்ளன. ரூ .3,000 மில்லியன் ஒதுக்கீடு
* கொவிட் பாதிக்கப்பட்ட துறைகளின் ஊழியர்களுக்காக புதிய காப்பீட்டு திட்டம்.
* நாடு முழுவதும் 4ஜி கவரேஜ் வழங்கி டிஜிட்டல் இலங்கையை உருவாக்க 15,000 மில்லியன் முதலீடு செய்ய திட்டம்.
* சமூக பாதுகாப்புக்காக சிறப்பு பொலிஸ் வாகனங்கள்
* தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக ரூ .8 பில்லியன்
* வழக்கமான வீட்டு சந்தையை ஊக்குவிக்க வருமான வரி விலக்கு.
* தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கடற்படைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு. ஏனைய படைகளுக்கும் உபகரணங்களுக்காக 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
* வருமான வரி செலுத்துவோருக்கு எளிய ஒன்லைன் வருமான முறை
* புதிய நிறுவனங்களைத் தொடங்க இளைஞர்களுக்கு கடன் வழங்க நிதி
* விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வரிகளிலிருந்து விலக்கு
* தொலைத்தொடர்பு, மதுபானம், சிகரெட், வாகனங்கள் மற்றும் பந்தயங்களுக்கு சிறப்பு பொருட்கள் மற்றும் சேவை வரி
* 6% வளர்ச்சி விகிதத்தை பராமரிக்க எதிர்பார்க்கிறது, பணவீக்கம் சுமார் 5%, பட்ஜெட் பற்றாக்குறை 4% ஆக குறைக்கப்படும்.
,