2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், பாராளுமன்றத்தில் 97 மேலதிக வாக்குகளினால் இன்று நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)