செய்மதி தொழில்நுட்பத்தின் தரவுகளுக்கு அமைய, புரவி சூறாவளி இலங்கைக்குள் பிரவேசித்துள்ளது.
சுமார் 20 வருடங்களுக்கு பின்னர், சூறாவளியொன்று நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளிகள், இலங்கைக்கு அண்மித்த கடல் பிராந்தியத்தின் ஊடாக மேல் நோக்கிய திசையில் பயணித்திருந்த பின்னணியில், சுமார் 20 வருடங்களின் பின்னர் புரவி சூறாவளி நாட்டிற்குள் பிரவேசித்துள்ளது.
2000 டிசம்பர் 25ம் திகதி இலங்கையின் கிழக்கு கரையோரத்தின் ஊடாக இந்த சூறாவளி நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
2000ம் ஆண்டு வங்காள விரிகுடாவில் உருவான சூறாவளி, மணித்தியாலத்திற்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில், தற்போது நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக புரவி சூறாவளி மணித்தியாலத்திற்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் இந்த சூறாவளி நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சூறாவளி காரணமாக நாட்டில் பல பகுதிகளிலும் கடும் காற்றுடனான கடும் மழை பெய்து வருவதாக திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புரவி சூறாவளி நிலைக்கொண்டுள்ள இடத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்