இலங்கை மத்திய வங்கியின் 70வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட 20 ரூபா நாணய குற்றியை, மத்திய வங்கி ஆளுநர் W.D.லக்ஷ்மன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நாணய குற்றி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
05 மில்லியன் நாணயங்களை எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி முதல் புழக்கத்தில் விடப்படும்
என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post