தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது சிசுவின் ஜனாஸாவை பொறுப்பேற்க மறுக்கவில்லை என அண்மையில் உயிரிழந்த 20 நாள் சிசுவின் தந்தை தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சியான சுவர்ணவாஹினிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது அனுமதியின்றி சிசுவின் ஜனாஸா (பூதவுடல்) தகனம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
காலம் தாமதித்து அழைத்து வந்தமையினாலேயே, சிசுவை காப்பாற்ற முடியவில்லை என வைத்தியர்கள் வெளியிட்ட கருத்தையும், அவர் நிராகரித்துள்ளார்.
வைத்தியர்கள் கூறும் தினத்திற்கு முந்தைய தினமே, சிசுவை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது அனுமதியின்றியே, சிசுவின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஆகக் குறைந்த வயதுடைய மரணம் அண்மையில் பதிவானது.
கொழும்பு ரிஜ்வே ஆரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 20 நாள் சிசுவொன்றே இவ்வாறு உயிரிழந்திருந்தது.(TrueCeylon)