2 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மண்டையோடு ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தென் ஆபிரிக்க வலயத்தில் தொல்பொருள் ஆய்வுகளை நடத்தும் அவுஸ்திரேலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளில் பற்களும் காணப்படுவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மனிதர்களின் பரிணாம வளர்ச்சிக்கு இது முக்கியமானதொரு தகவலாக இருக்கும் என அவர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடானது, ஆண்ணொருவருடையது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மெல்போன் பல்கலைக்கழகத்தினால் இந்த தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியிலிருந்து மேலும் பல மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.