இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150தை எட்டியது.
இன்றைய தினம் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 152ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 655 கொவிட் தொற்றாளர்களுடன், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,790ஆக அதிகரித்துள்ளது.
8848 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 23,793 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர். (TrueCeylon)