சீனாவில் தயாரிக்கப்படும் சினோஃபார்ம் தடுப்பூசிகள் 14 மில்லியன் டோஸை வாங்க 22 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியால் இதற்கான அமைச்சரவைப்பத்திரம் முன்வைக்கப்பட்டு இருந்தது.
சீன தடுப்பூசிகளின் பங்கு பல பகுதிகளிலும் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து பகுதிகளுக்கும் நவம்பர் 30 க்கு முன் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Discussion about this post