இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமானது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் அதிக்கூடிய ஓட்டமாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
அஞ்சலோ மெத்திவ்ஸ் 27 ஓட்டங்களையும், தசுன் ஷனக்க 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டுவட் போர்ட் மற்றும் டொம் பேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்து அணி பதிலுக்கு தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது. (TrueCeylon)
Discussion about this post