வெளிநாடுகளிலுள்ள விமான நிலையங்களில் நிர்கதிக்குள்ளாகியுள்ள 33 இலங்கையர்களை அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, 13 விமான நிலையங்களில் 33 இலங்கையர்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளதாக தகவல் கிடைத்துள் பின்னணியிலேயே இந்த தீர்மானத்தை அரசாங்கம் எட்டியுள்ளது.
இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்படும் இலங்கையர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, ஓமானின் மஸ்கட் விமான நிலையத்தில் 5 இலங்கையர்களும், டுபாய் விமான நிலையத்தில் 3 இலங்கையர்களும், சிங்கப்பூர்வ விமான நிலையத்தில் 7 இலங்கையர்களும், எத்தியோப்பியா விமான நிலையத்தில் ஒரு இலங்கையரும், துருக்கி விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்களும், மலேசியாவில் ஒரு இலங்கையரும், புதுடில்லி விமான நிலையத்தில் ஒரு இலங்கையரும், மாலைத்தீவில் ஒரு இலங்கையரும், லண்டன் விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்களும், சிஷல்ஸ் விமான நிலையத்திலுள்ள ஒரு இலங்கையர், பப்புவா நியூகினியா விமான நிலையத்தில் மூன்று இலங்கையர்களும், போர்த்துக்கள் விமான நிலையத்தில் ஒரு இலங்கையரும், எகிப்து விமான நிலையத்திலுள்ள ஒரு இலங்கையருமான மொத்தமாக 33 இலங்கையர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரமேஷ் பத்திரண கூறினார்.