13 வயது முதல் பிரேதங்களை தயார்ப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் யுவதியொருவர் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலி – பரகொட பகுதியிலுள்ள இந்த யுவதி, தனது 13வது வயது முதல் பிரேதங்களை தயார்ப்படுத்தும் தொழிலை செய்து வருகின்றார்.
குறித்த யுவதியின் பெற்றோர், இதே தொழிலில் ஈடுபட்டு வருகின்ற பின்னணியில், தானும் அதே தொழிலை தேர்ந்தெடுத்து செய்து வருவதாக அவர் கூறுகின்றார்.
இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு பயம் இல்லையா என பலரும் வினவுவதாக கூறிய அவர், தனக்கு எந்தவித பயமும் கிடையாது என குறிப்பிடுகின்றார். (Hiru News)
Discussion about this post