கொழும்பிலுள்ள பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிலுள்ள 25 பேர் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் பொலிஸ் அவசர பிரிவின் கார்களில் கடமையாற்றும் அதிகாரிகள் கிடையாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
பொலிஸ் தலைமையகத்தின் அழைப்பை ஏற்கும் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கே இவ்வாறு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
பொலிஸ் ரோந்து கடமைகளில் ஈடுபட்ட அதிகாரியொருவரின் ஊடாக இந்த கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது. (TrueCeylon)