பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு மற்றும் வேலை நாட்களை 25 நாட்களாக அதிகரிக்கும் கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உரிமைக்கான இயக்கம் போராட்டமொன்றை நடத்தியுள்ளது.
ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முதலாளிமார் சம்மேளனம் செவிசாய்க்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், உறுதி வழங்கியதை போன்று 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வலி வகுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என மலையக சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post