சிலோன் டீ என்ற நாமத்தை கொண்ட இலங்கை தேயிலையை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையில், இலங்கை தேயிலை சபை கைச்சாத்திட்டுள்ளது.
சீனாவின் ஃபு(F)ஜிஹேன் ஸ்டார்−சைனா இன்டர்நெஷனல் நிறுவனத்துடன் நேற்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம், இணைய வழியாகவும், அதற்கு வெளியிலும் சிலோன் டீ நாமத்தைக் கொண்ட தேயிலையை விற்பனை செய்ய முடியும்.
இந்த உடன்படிக்கையின் படி, இந்த ஆண்டில் மாத்திரம் 4 மில்லியன் கிலோகிராம் தேயிலையை, இலங்கையிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பு வழங்க இணக்கம் எட்டப்பட்ட தினத்திலேயே, இலங்கை தேயிலை சபை இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post