இலங்கையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1.2 மில்லியனை எட்டியுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தரவுகளுக்கு அமைய, 1204350 பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் முதலாவது பி.சி.ஆர் பரிசோதனை கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி நடத்தப்பட்டது.
பெப்ரவரி மாதம் 18ம் திகதி ஒரு பி.சி.ஆர் பரிசோதனை மாத்திரமே நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நாளொன்றில் அதிகளவிலான பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்ட திகதியானது டிசம்பர் மாதம் 11ம் திகதி பதிவாகியுள்ளது.
டிசம்பர் மாதம் 11ம் திகதி 17425 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், நேற்றைய தினம் வரையான தரவுகளுக்கு அமைய 12 லட்சத்து 4 ஆயிரத்து 350 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)