இலங்கை : ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலம் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக குழாய் நீரை, ஹோமாகம பொலிஸார் சட்ட விரோதமாக பெற்றுக்கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இரத்மலானை விசேட சோதனை பிரிவினால் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், இந்த விடயம் தொடர்பில் தற்போது பொலிஸ் நிலையத்தில் சேவைப் புரியும் உயர் அதிகாரிகளுக்கு எந்தவொரு விடயமும் தெரியவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பொலிஸ் நிலையம், அரச நிறுவனம் என்பதனால், நீர் விநியோகத்தை தடை செய்யவில்லை என சுற்றி வளைப்பை மேற்கொண்ட உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post