சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாரவில – தொட்டுவாவ பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 100 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்திய கார், வேன் மற்றும் டிக் வாகனமொன்றையும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)