ஹட்டன் – ஐய்லன்ட்ஸ் தமிழ் பாடசாலையின் மாணவர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலையின் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் – டிக்கோயா நகர சபை பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.
கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட மாணவன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாடசாலைக்கு வருகைத் தந்துள்ளதாக அலுவலகம் குறிப்பிடுகின்றது.
குறித்த மாணவனுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 58 மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவனின் தந்தைக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் கொழும்பிலிருந்து ஹட்டன் நகருக்கு வருகைத் தந்த ஒருவர் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post