ஹட்டன் − கொட்டகலை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த16ம் திகதி நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் ஊடாக இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியிலிருந்து வருகைத் தந்த பெண்ணொருவர், கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் 8 பேருக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 6 பேருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டவர்களில் பாடசாலை மாணவி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post