ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை பெப்ரவரி மாதம் 11ம் திகதி கோப் குழுவிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ஷரித்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
பெப்ரவரி மாதம் 12ம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை கோப் குழுவிற்கு அழைக்க தீர்மானித்துள்ளதுடன், அன்றைய தினம் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கை குறித்து ஆராயவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவிக்கின்றது.
மேலும், கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் அதிகளவில் காணப்படுகின்ற பகுதிகளிலுள்ள மக்களை மீள்குடியமர்த்துவது தொடர்பிலான திட்டத்தின் முன்னேற்றம் குறித்து, பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஆராய தீர்மானிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post