ஐ.டி.எச் வைத்தியசாலையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றமையினால், கொவிட் தடுப்பூசி ஆரம்ப நிகழ்வில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும், தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவினால் வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை சுகாதார பிரிவிற்கும், பாதுகாப்பு பிரிவிற்கும் வழங்க கிடைத்தமையை எண்ணி தான் மகிழ்ச்சி அடைவதாகவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்ததன் ஊடாக, கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் வலுவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கூறுகின்றார்.
உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி, தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தை தான் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோரின் தலைமையில், எதிர்பார்த்த காலத்திற்கு முன்னதாகவே தடுப்பூசி திட்டத்தை ஆரம்பிக்க முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post