வெள்ளவத்தை கடலில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
இந்த சடலம் இன்று (13) பிற்பகல் கரையொதுங்கியதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சடலம் அடையாளம் காண முடியாத வகையில் உருகுலைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று முற்பகல் சடலமொன்று கடல் நடுவில் மிதப்பதை அவதானித்த பிரதேச மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, குறித்த இடத்திற்கு வருகைத் தந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)