வெள்ளவத்தை பொது வர்த்தக கட்டடத் தொகுதியில் கடமையாற்றிய 12 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 19ம் திகதி நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக இவர்களுக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, குறித்த 12 பேருடன்; நெருங்கிய தொடர்புகளை பேணிய 21 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பொது கட்டடத் தொகுதிக்குள் செல்வதற்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post