ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரவிருந்த பயணிகள் விமானம், எதிர்வரும் 31ம் திகதி வரை தனது பயணத்தை ரத்து செய்துள்ளது.
எரோப்லோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமே இவ்வாறு தனது பயணத்தை பிற்போட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தனது சுற்றுலாவின் போது 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க தவறிய நிலையிலேயே, பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த விமானத்தின் ஊடாக சுமார் 300ற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாளைய தினம் (26) நாட்டிற்கு வருகைத் தர திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeyon)