அரச மற்றும் தனியார் துறைகளில் கடமையாற்றுவோருக்கு வீடுகளை கொள்வனவு செய்வதற்காக 2021ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட 6.25 வீத வட்டியுடனான விசேட கடன் திட்டம் இன்று (01) முதல் அமுலுக்கு வருகின்றது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால், நகரங்கள் மற்றும் நகரங்களை அண்மித்த பகுதிகளில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவிக்கின்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொழும்பு உள்ளிட் பகுதிகளுக்கு வருகைத் தந்து பணிப்புரியும் இளைய சமூகத்திற்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் ஊடாக 100 லட்சம் ரூபா வழங்கப்படவுள்ளதுடன், அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தும் காலம் 25 வருடம் என கூறப்படுகின்றது.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் ஊடாக இந்த கடனை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post