கொவிட் தொற்றினால் வீடுகளில் உயிரிழந்தோர் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்க சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் மினுவங்கொட கொத்தணி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், இன்று வரையான காலம் வரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறுகின்றது.
இந்த நிலைமை குறித்து ஆராயுமாறு அவர்கள் சுகாதார தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே குழுவொன்றை நியமித்து, விடயங்களை ஆராய இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன