விளை நிலங்களை பாதுகாக்கும் நோக்குடன், ஒரு ஏக்கரிற்கும் அதிகமான காணியை பராமரிக்கும் விவசாயிகளுக்கு துப்பாக்கியை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இன்று (11) இடம்பெற்ற ஒத்தி வைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடல்களை நடத்தி, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் விவசாயிக்கு, துப்பாக்கியை வழங்கும் சட்டம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு காணப்படாது என அமைச்சர் கூறியுள்ளார்.
அதனால், ஒரு ஏக்கருக்கு மேல் காணிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு துப்பாக்கியை வழங்க பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post