விமான நிலையங்களை திறப்பதற்கான சுகாதார வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
விமான நிலையங்களின் ஊடாக நாட்டிற்கு வருகைத் தரும் பயணிகளினால் வைரஸ் பரவாதிருக்கும் வகையிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பான பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
கொவிட் வைரஸ் தாக்கம் நாட்டிற்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டாலும், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் ஊடாக மீண்டும் வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
அவ்வாறு நாட்டிற்கு வைரஸ் உட்பிரவேசிக்கும் விதம் குறித்து தாம் முழுமையாக ஆராய்ந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியங்களை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை தாம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
விமான நிலையங்களின் ஊடாக பெருமளவிலான மக்கள் வருகைத் தருவார்களாயின், அவர்களிடமிருந்து வைரஸ் பரவாதிருப்பதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார். (TrueCeylon)