லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் கலந்துக்கொள்வதற்காக பாகிஸ்தான் அணி வீரர் சயிட் ஹப்ரிடி, விமானத்தில் ஏறியுள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து, கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி அவர் தற்போது வருவதாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Thank God I was able to take the flight in time and now I’m on way way to Colombo and then Hambantota to join Galle Gladiators for the LPL 🙏 Look forward to an exciting tournament pic.twitter.com/8vSyqtDrC3
— Shahid Afridi (@SAfridiOfficial) November 24, 2020
கோல் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடும் சயிட் ஹப்ரிடி, நேற்றைய தினம் இலங்கைக்கு வருகைத் தர திட்டமிட்டிருந்தார்.
எனினும், தான் வருகைத் தரவிருந்த விமானத்தை தவறிட்டமையினால், தன்னால் வர முடியவில்லை என அவர் நேற்று டுவிட்டர் ஊடாக அறிவித்திருந்தார்.
Missed my flight to Colombo today morning 😕
Nothing to worry, I’ll be reaching soon to take part in the LPL for Galle Gladiators. Look forward to joining my teammates— Shahid Afridi (@SAfridiOfficial) November 23, 2020
இந்த நிலையில், இன்றைய தினம் வருகைத்தந்துக்கொண்டிருப்பதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.